கோல்ப், நீச்சல், செஸ் போன்ற விளையாட்டுகளில் இந்தியாவில் சாதனை புரிந்த வீரர்களை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நுால். ஸ்னுாக்கர், லான் பவுல்ஸ் போன்ற விளையாட்டுகள் பற்றிய விபரமும் அடங்கியுள்ளது.
கோல்ப் விளையாடுவதற்கு உரிய விதிகளை அறிமுகம் செய்வதுடன் துவங்குகிறது. மிக எளிய நடையில் அந்த விளையாட்டு குறித்து விவரிக்கிறது. தொடர்ந்து இந்த விளையாட்டில் சாதனை படைத்து வருபவர்கள் பற்றிய விபரங்களை, குடும்ப வரலாற்று பின்னணியுடன் தருகிறது.
அடுத்து ஸ்னுாக்கர், நீச்சல், செஸ் போன்ற விளையாட்டுகளில் சாதனை புரிந்த வீரர் – வீராங்கனை பற்றிய குறிப்புகள் உள்ளன. விளையாட்டில் சாதிக்க விரும்புவோருக்கு இந்த வாழ்க்கை பாடங்கள் வழிகாட்டியாக அமையும். விளையாட்டில் ஆர்வத்தை துாண்டும் நுால்.
– ராம்