கிராமத்தில் அதிக சொத்துகள் வைத்து இருந்தவரின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாக கூறும் நுால். கிராமத்திலேயே இந்த பெரிய மனிதருக்கு தான் ஊரின் நான்கில் மூன்று பகுதி சொத்து உள்ளது. இவர் கருணை உடையவராக விளங்குகிறார்; பண உதவியும், வேலையும் அளித்து வருகிறார். வேலைக்கு வைக்கும் ஆட்களில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த இரு குடும்பத்தின் இளம்பெண்ணும், வாலிபனும் வெளியூர் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வாழ்க்கையை படம் பிடிக்கிறது.
பெரியவரின் மூன்று மகன்கள் வெளிநாடுகளில் படித்த போது, உடன் படித்தவர்களையே திருமணம் செய்து கொள்கின்றனர். ஒவ்வொருவரது வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை பல கோணங்களில் காட்டியுள்ளது. சுவாரசியமான நுால்.
– முகில் குமரன்