பேச்சு, செயல் என அன்றாட வாழ்வில் பெண் – ஆண் சமத்துவத்தை பேண வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சமன்நிலையை குலைக்கும் வகையில் உள்ள செயல்களை சுட்டிக்காட்டுகிறது.
பெண் உரிமையை வலியுறுத்தும், 23 கட்டுரைகளின்தொகுப்பாக மலர்ந்துள்ளது. முதலில், ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ என துவங்கி, ‘பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா’ என்ற தலைப்பில் நிறைவு பெறுகிறது. அன்றாடம் நண்பர்களிடம், பொது உரையாடல்களில் பெண்மையை கீழ்மைப் படுத்தும் செயல்பாடுகளை நுணுக்கமாக ஆராய்கிறது.
காலங்காலமாக பயன்படுத்தும் சொல்லாடல் மற்றும் செயல்களில் சமத்துவமற்ற நிலையை சுட்டிக்காட்டி, மாற்றத்துக்கு அறைகூவல் விடுக்கும் நுால்.
– மலர்