தொன்மை தமிழ்ச்சொற்கள் உலக மொழிகளில் பரவிக் கலந்துள்ளதை கூர்மையாக ஆய்ந்துள்ள நுால்.
பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் எவ்வாறெல்லாம் திரிக்கப்பட்டுள்ளன என்பது பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. தாவரவியல், இயற்பியல், கணிதவியல், கல்வியியல், மரபியல் என துறை கலைச்சொற்களில் தமிழ் ஊடுருவியிருப்பதைக் காட்டியிருப்பது வியக்கவைக்கிறது.
உலகளாவிய பயன்பாட்டு எண்கள், மாதங்கள் போன்றவற்றிற்கும் தமிழே மூலம் என முன்வைக்கப்பட்டுள்ளது. பண்பாட்டுக் கலப்புகளால் ஏற்கப்பட்ட சிதைவுகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. திரிந்து வடமொழி வேர்ச்சொற்களாக உருவானதும் விவரிக்கப்பட்டுள்ளது.
சொற்பிறப்பியல் ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய கருத்துக் கருவூலம் நூல்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு