குழந்தை வளர்ப்பு பற்றிய நுால். பதின் பருவம் வரை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெல்லும் வழிமுறைகள் கூறப்பட்டுஉள்ளன.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் பெற்றவர்களை விட, உறவினர்களின் பார்வை எப்போதும் குழந்தைகளின் மீது இருந்தது பெரிய அரணாக அமைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று வளர்க்கும் முறை, படிப்பு, திருமணம் எல்லாமே யாரையோ கேட்டு முடிவெடுக்கும் தன்மையில், ‘கவுன்சிலிங்’ மயமாகி விட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம், பரம்பரை, குலம், கோத்திரம், கிராம தேவதை விபரங்களை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும் என கூறும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து