இலங்கை வரலாறு, யாழ்ப்பாணத்தின் பெருமை குறித்த தொகுப்பு நுால்.
தமிழகமும், இலங்கையும் குமரிக் கண்டமாக இருந்தது என்றும், அதற்கு சான்றுகள் குமரி மாவட்டத்தில் கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. ‘லெமூரியா’ என்ற சொல்லின் விளக்கமும், லெமூர்கள் மனிதனின் ஆதி மூதாதையர் என்றும் கூறுகிறது.
கடலில் மூழ்கி மீண்டும் வெளிப்பட்ட பகுதியே யாழ்ப்பாணம் என்றும் தெரிவிக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின், அரசியல் அமைப்பு முறை பற்றி தீர்மானித்த குழு, தமிழர் உரிமையை மறுத்ததாக பதிவு செய்துள்ளது.
புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதல்கள், இந்தியா பயிற்சி அளித்து ஆயுதங்கள் வழங்கியது குறித்த தகவல்கள் உள்ளன.
– டாக்டர் கலியன் சம்பத்து