எண்ணங்களே செயலாகி அதன் அடிப்படையிலேயே உயர்வு அமைகிறது என எழுச்சியூட்டும் நுால். அனைவருக்கும் குறிக்கோள் உண்டு, ஆசை உண்டு. அதை அடையத் தடையாக இருப்பது தயக்கம். அதை உடைத்து முன்னேற வழிகாட்டுகிறது.
‘நம்பிக்கை வளர்ப்போம், திட்டமிடுவோம், தீர்மானிப்போம், இயன்றதைச் செய்வோம், தயக்கத்தைத் தவிர்ப்போம், காலம் உணர்வோம், நினைத்தது முடியும்’ என்ற தலைப்புகளே நம்பிக்கையூட்டும் தாரக மந்திரங்களாய் அமைந்து எழுச்சியூட்டுகின்றன.
மனதில் சோர்வு நீங்கி, ஒருவகை புத்துணர்வோடு வாழ்வின் புதிய பாதைக்கு அடியெடுத்து வைக்கத் துாண்டுகின்றன. நம்மை உணர்ந்து ஊக்கத்தோடு செயல்படுவோம். செயல் நம்மை உயர்த்தும் என நம்பிக்கை தரும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்