முற்போக்கு சிந்தனைகள் அடங்கிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணியமே ஆட்சி செய்கிறது. பெண்களுக்கும் உணர்வுகள் பொது என்றும், அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக உணர்த்துகின்றன.
குடியின் கொடுமையை விளக்குகிறது குடியேறியவாழ்வு. வறுமையில் சிக்கும் இளம்பெண்ணின் நிலை, நாட்டு நலப் பணியில் ஈடுபடும் ஏழை மங்கை, திருமண வியாபாரத்தில் ஒதுக்கப்படும் பெண்ணின் ஆன்மா என, பெண்களைப் போற்றும் வகையில் கதைகள் அமைந்துள்ளன.
காதலையும், பெண்களையும் முன்னிறுத்தி படைத்திருப்பினும் வள்ளுவர், கம்பர், காந்தி, பாரதியை உடன் பயணிக்க வைத்திருப்பது தனிச்சிறப்பு. பெண்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்