வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படை போலீசாரால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பதிவு செய்த மலைவாழ் மக்களுக்கு நியாயமும், பரிகாரமும் கிடைக்கவில்லை என்பதை பேசும் புத்தகம்.
தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்த சதாசிவம் விசாரணைக் குழுவின் முன், பாதிக்கப்பட்ட மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
உடல் மற்றும் உளவியல் ரீதியிலான தாக்குதல், சித்ரவதை முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வாசிக்கையில் உடல் நடுங்குகிறது. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில், அத்துமீறிய அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நுால்.
– பெருந்துறையான்