புதுமண தம்பதியர் உறவை பலப்படுத்தும் பாக்களின் தொகுப்பு நுால். சுவைக்கும் கருத்தை எளிய நடையில் தருகிறது.
ஒவ்வொன்றும் மூன்று வரிகள் உடையது. அன்பின் பல நிலைகளை கனிவாக ஊட்டுகிறது. கடைசி பகுதியில், ‘கூடலின் முன்னால் ஊடல் தருவது கொள்ளை இன்பம்’ என்ற தலைப்பு உள்ளது.
அதில், ‘அணைக்க அவன் வரும் முன் கொஞ்சம் சுணக்கம் காட்டினால் தான், பின்பு பிணைப்பில் சுகம் கூடும்’ என காதல் மயக்கத்தை வெளிப்படுத்துகிறது. கனிவு தரும் நுால். – ராம்