கவிஞர் தமிழ்ஒளியின் சமூக சிந்தனை கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி மகத்துவம், பகுத்தறிவு, பொதுவுடைமையை அடிப்படையாக கொண்டது. வால்மீகி, கம்பர், சுப்பிரமணியனார், புதுமைப்பித்தன் ஆகியோர் இந்திரன் குறித்து பேசியதை ஆராய்கிறது. சேர, சோழ, பாண்டியர், தொல்காப்பியம் குறித்து பேசுகிறது. தமிழர் ஆதி கால சமுதாயத்தை அலசுகிறது.
அன்றைய, ‘கிசான் தலைவர்கள்’ அதிகாரத்தை கூறுகிறது. அதில், கூட்டு வாழ்வியல் வழிகாட்டுதல் இருந்ததாக உணர்த்துகிறது. காட்டு சமுதாயம், கூட்டு சமுதாயம் ஆனதை விவரிக்கிறது. வாழ்வது, உணவு தேடுவது, உண்பது, பொழுதுபோக்கு இணைந்து இருக்க வலியுறுத்துகிறது. தமிழ் சமூகத்தின் ஆதிகால வாழ்வியல் முறையை கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்