யோகப் பயிற்சியின் அவசியத்தையும், விதிமுறைகளையும் எடுத்து இயம்பும் நுால். வினைப்பயன், தவ வாழ்க்கை, யோகம் ஒரு யாகம் மற்றும் அட்டாங்க யோகம் போன்ற பொருள்களில் தகவல் தருகிறது. குருவை வழிபட்டு எச்செயலையும் துவங்க வேண்டும் என்கிறது. அழியும் உடலை, யோக நெறிகள் கொண்டு ஆலயம் ஆக்க முடியும் என்கிறது.
திருமூலரின் திருமந்திரம், யோகப் பயிற்சி சூத்திரங்களைத் தருகிறது. உள்ளத்தையும் உடலையும் கோவிலாக்கியதை திருமந்திர துணை கொண்டு விளக்கிச் சொல்கிறது. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த யோகக் கலை உதவும். ஐம்புலன் அடக்கம் யோகத்தின் வழி சாத்தியம் என்கிறது.
– பேராசிரியர் இரா.நாராயணன்