யோகக் கலையில் பிராணாயாமம் பற்றி உரிய படங்களுடன் எழுதியுள்ள நுால்.
பிராணாயாமம் என்றால் பிராண வாயுவை உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சுக்கலை பற்றிய பயிற்சியாகும். கவலைப்பட்டால், கோபப்பட்டால், நடந்தால், பேசினால், ஓடினால், உடல் உறவு கொண்டால் அதிகமான மூச்சு உடலை விட்டு வெளியேறும். அதனால் உடலும், மனமும் சோர்வடையும்.
நிதானமாக சுவாசிக்கும் ஆமை, யானை, முதலை போன்ற விலங்கினங்களுக்கு ஆயுள் அதிகம். நிதான மூச்சுப் பயிற்சி வாழ்வின் தேவை. மனிதனின் அத்தியாவசியம் மூச்சு ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் பற்றியும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ள புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்