புத்தகங்களின் விமர்சன தொகுப்பாக அமைந்துள்ள நுால். சங்க காலத்தில் பெண் புலவர்களுக்கு இருந்த தீரமிக்க பண்பு மற்றும் மாண்பு பற்றியும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய சமூக நிலையை மேம்படுத்தும் கருத்துகளை வெளிப்படுத்துகிறது. உயர்ந்த பார்வையை ஏற்படுத்துகிறது. அது போன்ற கருத்தில் உள்ள நுால்களை வாசித்து, மதிப்பீடுகளை பதிவு செய்து விவாதத்தை முன் வைக்கிறது. நவீன வாழ்க்கை முறைக்கான புரிதல்களை நுால்கள் தருவது குறித்து எடுத்துரைக்கிறது. ஜாதி, மத வேற்றுமைகளால் வாழ்வில் உண்டாகும் தடங்கல்களை வெளிப்படுத்துகிறது. கருத்துக்கள் மீது கூர்மையான விமர்சனத்தை முன் வைக்கிறது. புத்தகங்களை பண்பாட்டுடன் ஆராய்ந்து அறிமுகம் செய்யும் நுால்.
– மலர்