எளிய பாடல்களின் தொகுப்பு நுால். வெளியான ஆண்டு, வெளியான இதழ் என குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
கலைமகள், அமுதசுரபி, சரஸ்வதி, தேசபக்தன், சுதேசமித்திரன் என இதழ்களில் வெளியான சந்தப் பாடல்கள், கருத்துக்கள் உடையவை. செக் தமிழ் அறிஞர் கமால் சுவலேபில், சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியை செம்மொழியில் மொழிபெயர்த்ததற்கு உரிய பாராட்டையும் தக்க சமயத்தில் பாடி இருக்கிறார்.
பெண்கள் குரல் குயிலுக்கு ஒப்பானது என்பதில் பாதி தான் உண்மை. மீதி பிணி, ஏக்கம், சோகம், பயம் நிறைந்துள்ளதாக பாடியுள்ளார். மே தினத்தை, ‘வான் சிவந்து மண் சிவந்து மகா கடலும் தான் சிவந்து ஊண் சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே’ போல் சிந்தித்து படிக்க வேண்டிய நுால்.
– சீத்தலைச்சாத்தன்