கனவு இதழில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்களின் மையப்புள்ளி திருப்பூர் தொழில் நகரத்தை சுற்றியே உள்ளது. முதன்முதலில், 1950ல் காதர் என்பவர் தான் திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு பிள்ளையார் சுழி போட்டாராம்.
எழுத்தாளர்களுக்கு இடையே நிறைய முரண்பாடுகள் வரக் காரணம் அரசியல், இனம், பொறாமை மற்றும் மன இறுக்கம் என்கிறார். மனித மனதை நுணுக்கமாக புரிந்து எழுதினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிறார்.
திறமையுள்ள எழுத்தாளர்களை ஆதரித்து கனவு இதழ், இழப்புகளை சந்தித்தது குறித்து எழுதியுள்ளார். வணிக நோக்கம் மற்றும் இலக்கிய தளத்தில் பயணிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்