அரிச்சந்திர புராணத்தை எல்லாருக்கும் புரியும் விதத்தில் கோர்வையாக தரும் அற்புத நுால். சத்தியத்தின் மீது அளவில்லாத மோகம் கொண்டு, மாறாமல் கடைப்பிடித்து மகாத்மாவாக உயர்ந்த கதையை விவரிக்கிறது.
வாழ்வில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்ட போதிலும், தர்ம வழியில் பொய் கூறாமல் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துகிறது. அப்படி நடக்க முடிகிறதோ... இல்லையோ, குறைந்தபட்சம் அது பற்றிய ஆர்வமாவது ஏற்படும். விருப்பம் இருந்தால் நிறைவேற்றும் எண்ணம் ஏற்படும்.
விவாக காண்டம், இந்திர காண்டம், மயான காண்டம், மீட்சி காண்டம், உத்தர காண்டம் என, 10 தலைப்புகளில் அமைந்துள்ளது. தற்காலத்திற்கு ஏற்ப சுருக்கமாக அமைக்கப்பட்டுள்ள நுால்.
– வி.விஷ்வா