மழலையர் வகுப்பறையில் பெற்ற அனுபவங்களை இலக்கிய மனதுடன் பகிர்ந்துள்ள நுால். நிகழ்வுகளை எளிய கவிதைகள் போல் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. வாழும் சூழலை புரிய துடிக்கும் மழலையர் செயலை உள்வாங்கி அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பிக்கும் போதே கற்றலும் உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. அறியாமல் தவிப்பது போன்ற ஆசிரியரின் பாவனைகள், எளிய கற்பித்தல் உத்தியாக வெளிப்பட்டுள்ளன.
வகுப்பறையை கூர்ந்து கேட்டல், விழிப்புடன் இருத்தல், சமநோக்கு பார்வை என மழலையருக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. பதிவாகியுள்ள ஆக்கங்கள், மழலை மொழியை மகிழ்வுடன் உள்வாங்கிய இனிய கவிதைகள் போல் இதம் தருகின்றன.
– மலர்