சிரிப்பு ஒரு சிறந்த டானிக். இந்த தொகுப்பில் 20 டானிக் சிறுகதைகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன. வனஜா என்ற கதாபாத்திரத்தை வைத்து தொடரும் கதைகள் இரண்டு. கொலுப்படி கதைகள் மட்டும் சிறுகதையில் நான்கு பாகங்கள் உள்ளன. தொகுப்பில் உச்சம் தொடுவது. மாறி வரும் தலைமுறைகள் என்பதாகும்.
மதுரை மாநகரம் அந்த காலத்தில் எப்படி இருந்தது... சென்னை நகரம், 1980ல் எப்படி இருந்தது... நாடு 2079ல் எப்படி இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. விஞ்ஞான யுகம் கற்பனை மட்டுமில்லை. நாடு போகும் வேகத்தை பார்த்தால், இவை நடக்கும் என்று தான் நம்பத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதைக்கும் ஒரு கார்ட்டூன். சிரிக்கத் தோன்றும் போதெல்லாம் எடுத்து படிக்க உகந்த நுால்.
– சீத்தலைச் சாத்தன்