முகப்பு » சிறுவர்கள் பகுதி » ஜீராவும் பஜ்ஜியும்

ஜீராவும் பஜ்ஜியும்

விலைரூ.120

ஆசிரியர் : ஹரிவர்ஷ்னி ராஜேஷ்

வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர்களுக்கான கார்ட்டூன் சேனல் கதாபாத்திரங்கள் போல் கற்பனை செய்து சற்று மாறுதலுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளை சித்தரிக்கும் படங்களும் உள்ளன. கதைகளையும், அவற்றுக்கான ஓவியங்களையும் இரண்டு சிறுமியர் உருவாக்கியுள்ளர்.

மழலை மாறாத மொழி நடையில் அமைந்துள்ள கதைகள் நேரடியாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் சம்பவங்களை மையக்கருத்தாக கொண்டுள்ளன. நகைச்சுவை தொனிக்கும் வகையில் அமைந்துள்ளன. கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை மிக மென்மையாக வலியுறுத்துகின்றன. கதைகளுக்கு இயைந்து வரும் வகையில் படங்கள் எளிமையாக வரையப்பட்டுள்ளன. சிறுவர்களின் படைப்பு ஆர்வத்தை பயிற்சியாக வெளிப்படுத்தும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

Anuishuya - Tamilnadu,இந்தியா

buy

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us