சிறுவர்களுக்கு நீதியை சிறுகதைகள் வழியாக புகட்டும் நுால். குல்லுாவின் துணிச்சல், குட்டி ஆமையும் குகை அரக்கர்களும், நாவல் மரமும் நாரையும், குற்றம் சொன்ன குரங்குகள், வேலியோர மரங்கள் போன்ற தலைப்புகளில் உள்ளன. கதையை மட்டுமின்றி இறுதியில் நீதியையும் கூறுகிறது.
ஒளிந்து கொண்ட பானை என்ற கதையில், இரு மண்பானை இடையே நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. ஒரு மண்பானை, சூளையில் சுட்டு விடுவர் என்ற பயத்தால் ஒளிந்து கொள்கிறது. மற்றொன்று, அதைப்பற்றி அஞ்சாமல் நெருப்பில் வெந்து உறுதி பெற்றதை உணர்த்துகிறது. இக்கதை, துன்பம் பொறுப்பவர் இன்பம் அடைவர் என்ற நீதியை சொல்கிறது. இந்த நுாலில் சொல்லப்பட்டுள்ள நீதிகள், சிறப்பான வாழ்க்கை அமைக்க உதவும்.
– வி.விஷ்வா