மலேஷியா சென்று உரிமைப் போரில் களப்பலியான மலேயா கணபதி வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் ஆவண நுால். தொழிலாளர்களின் தலைவராக பரிணமித்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மலேயா தொழிற்சங்க நிகழ்வுகள், தமிழர் சீர்திருத்த சங்கம், விளையாட்டரங்கம், இந்திய இளைஞர் சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து பங்காற்றியது பற்றி கூறப்பட்டுள்ளது. நேர்மை, உழைப்பு, நாட்டுப்பற்று, மக்கள் தொண்டு போன்ற பண்புகளால் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். தீண்டாமை ஒழிப்பு, தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்.
மலேயா விடுதலை பெற்ற நிகழ்வு, நேதாஜி வருகை புரிந்தது மற்றும் புரட்சியாளர்களாக விளங்கியவர்களின் தியாக வரலாறுகளும் பதிவிடப்பட்டுள்ளன.
– புலவர் சு.மதியழகன்