சாரண இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவுல் வாழ்க்கை வரலாற்றை இனிய நடையில் மனதில்பதிய வைக்கும் நுால். இயக்க தோற்றம், வளர்ச்சி, சாதனைகள் சுவைபட சொல்லப்பட்டுள்ளன.
மூன்று வயதில் தந்தையை இழந்த பவுல், போட்டித் தேர்வில் வென்று குதிரைப் படைத் தலைவரானார். பின் முயற்சியால் ராணுவத் தளபதியாகி, மாறு வேடத்தில் பகைமண்ணில் அலைந்து ரகசியங்களை அறிந்தார்.
குதிரை, நாய், பன்றி, சிறுத்தை என விலங்குகளிடம் அன்பு காட்டியது, லட்சியம் குறிக்கோளை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் கொடுத்தது எல்லாம் உள்ளன.
வளரிளம் பருவ மாணவ, மாணவியருக்கு சாரண பயிற்சி தர ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. வழிகாட்டியாகவும் விளங்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்