வில் வித்தை போட்டிகளில் பதக்கங்களை வென்ற சாதனையாளர் வாழ்க்கை பற்றிய தொகுப்பு நுால்.
வில் வித்தையை எங்கு சரியாக கற்றுக் கொள்ள முடியும் என்ற சந்தேகத்தை தீர்க்கும் விடை முதல் பகுதியில் உள்ளது. தொடர்ந்து வில் வித்தையில் சாதித்தவர்கள் பற்றி உள்ளது. வீரர்கள் சந்தித்த கடினமான தருணங்களிலிருந்து மீண்டது பற்றி விளக்குகிறது.
டோலா பானர்ஜி, தீபிகா குமாரி, மம்தா டுட்டு, அபிஷேக் வர்மா, மங்கள் சிங் சாம்பியா, அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ், ராகுல் பானர்ஜி என வில் வித்தை வீரர்களை பற்றி குறிப்பிடுகிறது. தொடர்ந்து வாள் வீச்சு, ட்ரயத்தலான், வேக நடை போட்டிகளில் சாதித்த சாதனையாளர்களையும் குறிப்பிட்டுள்ளது.
– வி.விஷ்வா