மருத்துவத்தில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா முன்னேறி இருந்ததை குறிப்பிடும் நுால். மனித உடலில் நாடி நரம்புகள் பற்றி எல்லாம் விவரிக்கிறது.
பழந்தமிழ் மருத்துவம் பின்னர் உலகெங்கும் பரவியதாக பேசுகிறது. எகிப்திய சமாதிகளில் சடலங்களை பாதுகாக்க புளி, அவுரி, மஸ்லின் போன்ற தமிழகப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்த விபரங்களை தருகிறது.
நோய்கள் பற்றி சித்த மருத்துவம் சொல்வதை விவரிக்கிறது. நின்ற, இருந்த நிலையில் பிரசவம் நிகழ்ந்ததை கோவில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது பற்றி சொல்கிறது. சங்க காலம் முதல், இன்று வரை மருத்துவம் வளர்ச்சி பெற்று உயர்ந்துள்ளதை காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்