விறுவிறுப்பாக படிக்கத் துாண்டும் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். சங்கர்லால் என்ற கதாபாத்திரம், குற்றவாளிகளை பிடிப்பதை சுவாரசியமாகத் தருகிறது.
முதலில், ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ என்ற கதை, செல்வந்தர் கொலையை துப்பறியும் சங்கர்லால், அவர் மகளையே திருமணம் செய்வதாக முடிகிறது.
பெண்ணைக் கொன்றவரை துப்பறிந்து கண்டறிவதாக உள்ளது ஒரு கதை. மற்றொன்று, ‘செய்யாத குற்றம் செய்தவர் யாரோ?’ என்பது. கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர் இறக்கவில்லை என நிரூபிக்கிறது. டோக்கியோ வந்த இந்திய நடிகை, கணவருடன் செய்த மோசடியை ஒரு கதை மையமாக்கியுள்ளது. துப்பறியும் நுட்பத்தை ஆர்வம் குன்றாமல் தரும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து