திருமூர்த்திமலை – உடுமலை இடையில் இருக்கும் பள்ளிபுரம் ஊரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கொங்கு வட்டார முதன்மைப் பயிரான கரும்பு விவசாய குடும்பங்கள் பற்றி பேசுகிறது.
வாழ்க்கை வசதி, ஜாதிப் பிரச்னை, கோவில் திருவிழாவை மையப்படுத்தி சுற்றி சுழல்கிறது. வருணனை எதுவும் இல்லாமலே படுவேகம் எடுக்கிறது கதை. தனித்த வருணனையாக அமையாமல், தேவைப்படும் போது மட்டும் நில அமைப்பை காட்டுகிறது. வாசிப்பு ஆர்வத்தை அது துாண்டுகிறது.
படுகளம் என்ற பெயருக்கு ஏற்ப, மனித மனதின் வன்மத்தை, ஒன்பது அத்தியாயங்களில் வெளிப்படுகிறது. தலைமுறை தாண்டியும் வன்மம் தொடர்வதை எடுத்துரைக்கிறது. உண்மை சம்பவம் போல் உள்ளது.
கொங்கு மண்டல வாழ்வியலை முன்வைக்கும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்