இலங்கையின் யுத்த வலிகளை, 10 வயது சிறுவன் பார்வையில் இருந்து விவரிக்கும் நாவல். அரசுக்கும், போராளிகளுக்கும் நடந்த சமாதான பேச்சில் துவங்கி, இறுதிப் போர் துவங்கும் காலக்கட்ட கதைக்களம்.
தமிழர் மனநிலை, போராளிகள் முடிவு, இலங்கை அரசின் நடவடிக்கையை, உண்மை, கற்பனை கலந்து நகர்த்துகிறது. போரால், ஒரு கிராமம், அதன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கண்ணீர் மல்க பேசுகிறது.
போர் நடக்கும்போது, மனிதர்கள், வளங்கள், விலங்குகள் கதி பற்றி உணர்த்தி அமைதியை வலியுறுத்தும் நுால்.