மனித மாண்பை அனுபவமாக உணர்ந்து வெளிப்படுத்தும் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழகத்தின் பெருமிதம், வளர்ச்சியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.
சென்னையில் துவங்கி அமெரிக்கா, மெக்சிகோ என விரிகிறது. பயணங்களில் உணர்ந்த மேன்மைகளை, சிறப்புகளை எளிமையாக சொல்கிறது. இனம், மொழி, நாடு கடந்து வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அனுசரணைகளை முன்னிறுத்துகிறது.
பயணங்களுக்கு உதவும் வகையில் பயனுள்ள குறிப்புகளையும் உரைக்கிறது. பொது அறத்துடன் வாழ வேண்டியதன் அவசியத்தை இயல்பாக சொல்கிறது. உணவின் உன்னதம், உலகில் நடந்துள்ள வளர்ச்சியை விவரிக்கிறது. கறுப்பின தாய்மையின் கனிவை நெகிழ்வுடன் பதிவு செய்கிறது. உலகில் அன்பும், பரிவும் மிகுந்துள்ளதை நம்பிக்கையுடன் காட்டும் காட்டும் நுால்.
– அமுதன்