தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நிலையை உரிய சான்றுகளுடன் விளக்கும் நுால். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை புத்தக வடிவமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 150 ஆண்டு காலத்தில் தமிழ் ஆய்வுலகில் நிகழ்ந்தவற்றை வரலாற்று பின்னணியுடன் சுருக்கமாகத் தருகிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்கள், அதன் போக்கு, ஆராய்ச்சி உலகில் ஏற்பட்ட மாற்றங்கள், கருத்துக்கள் என மிகத் தெளிவாகச் சுட்டுகிறது. பழமை வாதத்தில் இருந்து புதிய சிந்தனை போக்கு எழுந்ததற்கான காரணங்கள், அதில் ஏற்பட்ட தடைகள் பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் உள்ள கருத்தியல் தாக்கங்களை சமூகவியல் நோக்கில் வெளிப்படுத்தும் நுால்.
– மதி