குறளில் பாயிரம் பற்றி ஆய்வுகளை நுட்பமாக கவனித்து எழுதியுள்ள நுால். வள்ளுவரின் சமயத்தை அலசி, அகப்புறச்சான்று அடிப்படையில் நிறுவ முயன்றுள்ளது.
அன்றைய அரசியல், சமூகப் பொருளாதார அடிப்படையில் புறப்பொருள் களங்களான இறையாண்மை, போர் அவலம், தமிழ் மன்னர் வீழ்ச்சி, சமயச்சூழல் என தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தவம், நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் போன்ற தலைப்புகளில் விரிவான ஆய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத் தவம், துறவறவியல், நிலையாமை, சமூக நலம், மெய்யுணர்தல் பற்றி உள்ளன. இல்லறம், காதல் பற்றி விவாதம் முன்வைத்து இன்பியல் கோட்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் ஆய்வுக்கான தளத்தை கட்டமைத்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு