வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால். வைரமுத்துவின் முதல் கவிதை நுால் வைகறை மேகங்கள், 1972ல் வெளிவந்தது. அதற்கு கவியரசு கண்ணதாசன் நல்லாசி சொல்லி உள்ளார். இளம் பருவ காதல் தோல்வி நினைவுகள் இதில் அதிகம் உள்ளன. காதலர்கள் இல்லையென்றால் தபால் துறை நஷ்டப்பட்டு விடும் என்று எழுதியிருக்கிறார்.
மீண்டும் என் தொட்டிலுக்கு என்று தலைப்பு தாங்கிய நாவலும் காதல் தோல்விகளையே அடித்தளம் ஆக்கியுள்ளது. மனிதனின் ஒரு சொல் பிறப்பை மண்ணாக்குகிறது அல்லது பொன் ஆக்குகிறது என்ற வாசகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்