திருவாசகத்தின் தலைப்பு செய்யுள் சிவபுராணத்தில் ஏகன் அனேகன் என்று இறைவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர். தனித்தவனும் அவன் தான், அத்தனை பேரிலும் நிலைத்தவனும் அவன் தான் என்பதை விளக்கும் நுால்.
அவன் அருளாலே தாள் வணங்கி, கறந்த பால் கரும்புச் சாற்றுடன் மெய் கலந்ததுபோல் போன்ற அற்புத கருத்துக்கள் உடைய சிவபுராணத்தை ஆழ்ந்து படைத்துள்ளார். அல்லல் பிறவி அறுப்பானை அடைவது எவ்வாறு என்பதை மெய்ஞானம் கட்டுரை பகுதியில் துல்லியமாகச் சொல்கிறார்.
அகங்காரம், வினைப்பயன், மாயை பற்றிய கதை விளக்கங்கள் அருமை. திரும்ப படிக்கத் துாண்டும். அப்துல் கலாம் சொல்லிய கருத்துக்கள் தக்கவிதமாக எடுத்தாளப்பட்டுள்ளன. மதம் கடந்த படைப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்