கம்பரின் கவிநயத்தையும், பாடல்களின் பொருளாழத்தையும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். சங்க இலக்கியம் முதல் திரையிசை பாடல்கள் வரை மேற்கோள் காட்டுகிறது. பிரபலமான திரைப்பட காட்சிகள் மற்றும் வசனங்களை ஒப்பிட்டு, நகைச்சுவை உணர்வு குன்றாமல் விளக்கம் தந்திருப்பது தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு பாடலையும் பிரபலங்கள் கூறிய நய உரைகளுடன் சுட்டியுள்ளது. நாட்டு நடப்புகள் மற்றும் அன்றாட அரசியல் நிகழ்வுகளை இணைத்துள்ளது நயத்திற்கு வலுவூட்டுகிறது.
ஆர்வத்தைத் துாண்டும் வகையில் தலைப்புகள் அமைந்துள்ளன. தலைமுறைகள் தாண்டி தமிழரின் மனங்களில் கம்ப ராமாயணம் தங்கியிருக்கக் காரணம், கம்பன் படைத்த பாத்திரங்கள், தமிழ் மரபுக்கேற்ற வகையில் நடை, உடையில் உலவ விட்டதே எனப் பதிவிட்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்