ஜைன சமய முறைப்படி உண்ணாநோன்பு கடைப்பிடிப்பது, அதற்காக மனம், உடல், அறிவை ஆயத்தம் செய்வது, தியானம் செய்யும் முறைகள் இனிமையாக சொல்லப்பட்டுள்ள நுால். மூச்சு பயிற்சி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
நோன்பு முடிந்த பின் உண்ண, பல வகை இனிப்புகள் தயார் செய்யும் முறையும் கூறப்பட்டுள்ளது. இனிப்புகள் செய்யும் முறை நாவில் நீர் சுரக்க வைக்கிறது.
கிராம்பு, சர்க்கரை கலந்த லாவுங் மிஷ்ரிகாபாணி பருகும் வழிமுறையை விவரிக்கிறது. காய்கறி டாலியா, கிச்சடி, பொங்கல் செய்யும் முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நீண்ட நாள் நோன்புக்கு பின் உண்ண வேண்டிய உணவும், அதன் அளவும் தரப்பட்டுள்ளது.
நலனை உயர்த்தும் நீண்ட கால விரதங்கள் பற்றிய விபரமான நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்