தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்பட உரையாடல் சிறப்புகளை வெளிப்படுத்தும் நுால். சில உரையாடல் பகுதிகள் அப்படியே எழுத்து வடிவில் தரப்பட்டுள்ளன. திரைக்கதைகளில் சமூக நீதிக் கோட்பாடு வெளிப்படுகிறது.
ராஜகுமாரி திரைப்படத்தில் துவங்கி, கனல் பறக்கும் உரையாடல்களோடு தொடர்ந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. காதலன் –- காதலி, கதாநாயகன் – -வில்லன், வில்லன்- – கதாநாயகி என எல்லா வகையிலும் சிந்தனை இடி மின்னலாக தெறிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
காட்சிகளில் பகுத்தறிவை புகுத்துவது சிறந்த உத்தி என உணர வைக்கிறது. கதாசிரியர்கள் மட்டுமன்றி நாடகக்கலையை தெரிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு