கால்பந்தாட்டத்தில் களத்தில் 90 நிமிடங்களும் போர்க்களம் தான். ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் முடியாது.
சாதுர்யமாக செயல்பட மூளை உத்தரவிட்ட அடுத்த நொடி, உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். தனக்கு மட்டும் பெருமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவே கூடாது. குழு அர்ப்பணிப்பு, ஒற்றுமை, இணக்கத்தன்மை, உடல் பலம், மன பலம் சமயோசிதம் ஒருங்கிணைந்த விளையாட்டு என விவரிக்கிறது. இதில் சிறந்த சாதனையாளர்கள் பற்றிய தகவல்களை தருகிறது.
துவக்கத்தில் இந்திய கால்பந்து அணி- ஒரு மீள் பார்வை என்ற தலைப்பில் இந்திய அணியின் பரிணாமம் பற்றி தரப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி வீரர்கள் பற்றி குறிப்பிடுகிறது. கால்பந்து விளையாட்டில் உத்வேகம் கொள்ள உதவும் நுால்.
– வி.விஷ்வா