இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம், சமூக சீர்திருத்தம் என பல துறைகளிலும் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால், அது பற்றி தெரியாமலே இருக்கிறது. பெண்களின் உழைப்பை, தியாகங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால்.
முதல் தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்சலை அம்மாள் என பலரையும் குறிப்பிட்டுள்ளது.
உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற ருக்மிணி லட்சுமிபதி, குழந்தைத் திருமணத்தைத் தடுக்கப் போராடிய ரமாபாய் ரானடே, தேவதாசி முறையையே ஒழிக்க களமிறங்கிய மூவலுார் ராமாமிர்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தகவல் நிறைந்துள்ள களஞ்சியம்.
– இளங்கோவன்