ஆட்சியாளருக்கும், பத்திரிகையாளருக்குமான மோதலை பரபரப்பாக விவரிக்கும் புத்தகம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கும் இடையே நடந்த மோதல்குறித்து விவரிக்கிறது.
யுத்தம் எந்தெந்த வடிவில் எல்லாம் விஸ்வரூபம் எடுத்தது; ஆட்சி அதிகார துணையோடு எப்படி எல்லாம் வன்மத்தோடு வாள் சுழற்றப்பட்டது என்பது சுயசரிதை போல் விவரிக்கப்பட்டுள்ளது.
தனக்கு பிடிக்காத அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள், கட்சிக்காரர்கள், கவர்னர் உள்ளிட்டோரை, ஜெயலலிதா எப்படி எல்லாம் பழி வாங்கினார் என்பதை, பரபரப்பும் கலகலப்பும் கலந்து இயல்பான பேச்சு நடையில் எழுதப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் கரங்கள் எந்த எல்லை வரை நீளும் என்பதை அழுத்தமாய் எடுத்துரைக்கும் நுால்.
– மேதகன்