நடைமுறை வாழ்வு சிக்கல்களை சமாளிக்கும் வழிமுறைகளை உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிதில் வாசிக்கும் நடையில் எழுதப்பட்டுஉள்ளது. வாழ்க்கை மீதான விமர்சனங்களை உறுத்தல் இன்றி முன் வைக்கிறது.
அன்றாட சம்பவங்களை அழகுற கோர்த்து, எதிர்பாராத திருப்பம் நிறைந்த நீதியை முன் வைத்து கதைகள் நிறைவு பெறுகின்றன. கதை போக்குடன், சமூக நிகழ்வுகளும் இயல்பாக சொல்லப்பட்டுள்ளன. ஆதங்கமும், இயலாமையும் ஆங்காங்கு வெளிப்பட்டுள்ளன.
முக்கியமாக, ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்ற கதை, குடும்பங்களில் தேசிய பார்வை இருக்க வேண்டிய சிந்தனைப் போக்கையும், தீர்வையும் முன்வைக்கிறது. பிரச்னைகளை அலசி தீர்வுகளை முன்வைக்கும் சுவாரசியமிக்க, 24 கதைகளின் தொகுப்பு நுால்.
– மலர்