காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக் கவிதைகளை உடைய தொகுப்பு நுால்.
முதுமையை, ‘களர் நிலத்தில் காய்ந்த செடி போல், தளர் முகத்தில் நரைத்த தாடிகள்’ என வர்ணிக்கிறது. காதல் உணர்வை, ‘ஓயாத உன் நினைவோ, பேயாக எனை வதைக்க காயாமல் கண்களிலே கன மழையாக்குதடி’ என பகிர்கிறது.
பிச்சைக்காரர் அவலத்தை, ‘செத்த இலையில் சிறு சோறு கிடைத்தால் போதும் செத்த பிணம் போல் சிரித்திடுவோம்’ என குறிப்பிடுகிறது. வள்ளுவருக்கும், காந்தியடிகளுக்கும் புகழ் சேர்க்கும் கவிதைகளும் இடம் பெற்றுள்ன. மனித மாண்பை போற்றும் புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்