கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசமாக காரணமாக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அரசியல் பயணம் மற்றும் அந்த நாட்டு விடுதலை வரலாற்றை கூறும் நுால்.
கிழக்கு பாகிஸ்தான், முழு பிராந்திய சுயாட்சி பெற வேண்டும் என போராடி, வங்கதேச தந்தை என பெயரெடுத்தவர் ஷேக். ஆறு அம்ச கோரிக்கையுடன், தனித்து இயங்கத் துாண்டிய காரணங்களை கூறுகிறது.
தான் துவங்கிய கட்சிக்கு, ‘அவாமி லீக்’ என்ற பெயர் மாற்றம் செய்த சூழலை பற்றி தெளிவாக பேசுகிறது. வங்கதேச விடுதலை போரை அலசுகிறது. சுதந்திரத்தன்று வங்கதேசம் ஏன் சோகமாக மாறியது என்பதற்கான காரணத்தைக் கூறுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் காரணங்களையும் சுருக்கமாகக் கூறுகிறது. வங்கதேசம் உருவான வரலாற்று தகவல்களை தரும் நுால்.
– டி.எஸ்.ராயன்