கற்றலில் உள்ள தடைகளை அகற்றி மனதை வளப்படுத்தும் நுால். மாணவர்களின் சுய பங்களிப்பு, பெற்றோர் காட்டும் அக்கறை, ஆசிரியர் வழிகாட்டுதலை மையப்படுத்தியுள்ளது.
பிள்ளைகளை புரிந்து வளர்ப்பதுடன், கவனித்து, கண்காணித்து, ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. தடம் மாறும்போது, கெடுபிடி காட்டாது, தோழமை உணர்வுடன் கண்டிக்கச் சொல்கிறது.
வாழ்க்கை உன்னதத்தையும், அறிவு தேடல் மீதுள்ள ஆர்வத்தையும், ஆளுமையை மேம்படுத்தும் ஆற்றலையும் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. சிகரம் தொட்ட ஆளுமைகள் கடந்து வந்த பாதையை முன்னுதாரணமாகக் கூறி, வாசிப்போர் மனதில் நம்பிக்கையை ஊட்டுகிறது. மாணவ – மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்