தமிழக கிராமப்புறங்களில் பாரம்பரியமாக ஆடும் விளையாட்டுகள் பற்றிய விவரிக்கும் நுால். மொத்தம், 106 வகைகள் குறித்து படங்களுடன் தரப்பட்டுள்ளது. இத்தனை விளையாட்டுகளா என வியக்க வைக்கிறது.
பாரம்பரியமாக நிலம் சார்ந்த ஆட்டங்களை பட்டியலிட்டு, ஆடும் முறைகளை தெளிவாக விளக்குகிறது. சில வினோதமாக உள்ளன. அதில், ‘ஆள் திரட்டுதல்’ என்ற விளையாட்டு, பழங்கால மன்னர்களின் போருடன் தொடர்புள்ளது போல் தெரிகிறது.
உடல், உள்ளத்தை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மூளையை சுறுசுறுப்பாக்க சில விளையாட்டுகள் பயிற்சி போல் அமைந்துள்ளன. கிராமங்களில் மக்கள் இன்றும் ஆடும் விளையாட்டுகள் குறித்த தகவல்களையும் தருகிறது. பாரம்பரியத்தை நினைவூட்டும் நுால்.
– ஒளி