கர்நாடகம் என்ற பெயரில் எழுத்தாளர் கல்கி எழுதிய விமர்சனங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இசை, நடனம், சினிமா பற்றி எழுதப்பட்டுள்ளது.
வரலாற்றுப் புதினங்களுடன் அறியப்பட்ட கல்கியை தேர்ந்த விமர்சகராகப் பார்க்க வைக்கிறது. மரபுக்கும், நவீனத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையாக அலசப்பட்டுள்ளன.
அக்காலத்தில் சினிமா என்ற ஊடகத்தை அணுகிய விதம் வியக்க வைக்கிறது. அது பழங்கதைகளில் இருந்து விடுபடாத கலையாக இருந்த சூழலை துணிவோடு அணுகியிருக்கிறது. சவுக்கடியாகத் தரும் விமர்சனங்களிலும் நகைச்சுவையைப் புகுத்த தவறவில்லை.
விமர்சனம் எழுதுவது ஒரு கலை என்று மெய்ப்பித்து இலக்கணம் வகுத்துள்ளார். பக்கத்துக்குப் பக்கம் படித்து மகிழலாம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு