சாதனை படைத்து வரும் பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர்களை அறிமுகம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். குத்துச்சண்டையில் புகழ்பெற்ற கலைவாணி முதல் வரை, 29 வீரர் – வீராங்கனையர் பற்றிய விபரங்களைத் தருகிறது.
வீரர்களின் வாழ்க்கை பற்றிய அடிப்படை தகவல்களை முதலில் தருகிறது. தொடர்ந்து, வாழ்க்கையில் எடுத்த பயிற்சிகள், சாதனைக்காக எடுத்த முயற்சிகளை தொகுத்து தருகிறது. கடந்து வந்த பாதை, அவற்றில் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி எல்லாம் விவரிக்கிறது,
வாழ்க்கையில் உச்சம் தொடும் போராட்டத்தை வெளிப்படுத்துவதால், படிப்போருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். சாதனையாளர்களின் சிரமங்களை பேசி, சாதிக்கத் துாண்டும் வகையில் அமைந்துள்ள நுால்.
– மதி