பணத்தாசையில் கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபருக்கும், வன அதிகாரியாக வந்து நல்லது செய்ய துடிப்பவருக்கும் இடையே நடக்கும் மோதலை சுவாரசியமாக பகிரும் நாவல்.
செம்மர கடத்தல் மாபியா கும்பலை சிக்க வைக்க, நேர்மை அதிகாரி எடுத்த தந்திரம், அவர்களிடம் சிக்கிய அப்பாவி மக்களை விடுவிக்க எடுத்த மனிதாபிமானம் என விறுவிறுப்பாக நகர்கிறது. கவர்ச்சியில் விழ வைத்து, கூலி தொழிலாளர்களை ஏமாற்றுவதை அலசுகிறது. குடும்ப எதிர்காலம் குறித்து கவலை கொள்ளாமல் மயக்க நிலையில் வைக்கும், கடத்தல் கும்பலின் சூழ்ச்சிகளை தோலுரிக்கிறது. நேர்மையான அதிகாரிகள் இருப்பதால், சில நியாயங்கள் ஜெயிப்பதாக கூறுகிறது. கதை எழுத முயற்சிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்