வருமான வரி, சர் சார்ஜ் விகிதம், செஸ், ஹெல்த் மற்றும் கல்வி வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க வரி பற்றி விரிவாக விளக்கும் நுால்.
வருமான வரி கணக்கிடும் முறை, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி செயல்பாடுகள், ரிசர்வ் வங்கியின் நடைமுறை, மத்திய அரசின் பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.
விவசாய இடு பொருள்கள், பெட்ரோலிய பொருட்களுக்காக அரசு வழங்கும் மானியம் விவரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி பற்றிய விளக்கமும் தரப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வருமானம்-, செலவு, பற்றாக்குறை புள்ளி விபரங்களும், வருமான வரியில் ஏற்பட்ட மாறுதல்களும் பதிவிடப்பட்டுள்ளன. பொருளாதாரம் இயங்குவதை தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்