சாமானிய மனிதர்களின் நெஞ்சங்களில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை, இயல்பான சொற்கள் வழியே வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களை பாத்திரங்களாகக் கொண்டு வாழ்க்கை பிரச்னை, குடும்ப சிக்கல், சமுதாய அவலங்கள், குழந்தை தொழிலாளர் என கதைகளங்கள் நீள்கின்றன.
அடங்கி கிடந்த அன்னையரின் மன அழுத்தங்களும், எழுச்சியும் பீறிடுவதைக் காண முடிகிறது. முதல் காதலை மூடி வைத்து அடை காக்கும், ‘குடையும்’ என்ற கதையும், நிறைவேறாத காதல் பொசுங்கியதை, ‘சாம்பல்’ கதையும் வெளிப்படுத்துகின்றன. முதலாளி தொடர்வதை, ‘வெளிச்சத்திற்கு வெளியே’ என்ற கதை விவரிக்கிறது. பெண்களின் அவலநிலையை சுட்டிக்காட்டி மனித நேயத்தை வலியுறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்