வாழ்க்கையில் முன்னேறும் வழிமுறைகளை எளிய முறையில் கற்பிக்கும் நுால். அனுபவங்களை கதை போல் சொல்கிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து போதிக்கிறது. அனுபவங்களில் கிடைத்த படிப்பினைகளை, சிறிய உரையாடல் போல் பின்னி புரிய வைக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், பெரும் பலன் எப்படி வந்து சேரும் என்பதை சொல்கிறது.
சாதாரண நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, பின்பற்றினாலே, முன்னேற்றம் வாசல் கதவை தட்டும் என விளக்குகிறது. ஒவ்வொரு உரையாடல் தொகுப்பும் ஒருவித படிப்பினையை தருகிறது. வாழ்வில் அன்றாடம் சந்திப்பவற்றில், பணித்தள நடைமுறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நுணுக்கங்களை போதிக்கிறது. முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நுால்.
– ராம்